தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் கொரோனா பணிகள்

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவில் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மிகவும் வறுமையில் உள்ள 15மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு தூத்துக்குடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் உயர் திரு .ஸ்ரீராம் அவர்கள், திரு.தனபால் அவர்கள், திரு.அலெக்ஸ் அவர்கள், திரு. மாரியப்பன் அவர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களின் சார்பாக வீட்டிற்கு தேவையான 5கிலோ அரிசி மற்றும் 24வகையான மளிகை பொருள்களை நேற்று (18.06.2021) மாலை 6.00 மணி முதல் தூத்துக்குடி மாவட்டம் இந்திரா நகர், திரு.வி.க.நகர், ஆசீர்வாத நகர், பசும்பொன் நகர் ஆகிய பகுதியில் உள்ள மிகவும் வறுமையில் உள்ள 15மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு நேரில் சென்று நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் மு.மருதப்பெருமாள்.எம்.காம் (தலைவர்), P.ஜெயராஜ் (செயலாளர்), K.செல்வக்குமார் ( பொருளாளர்), பேச்சிமுத்து (து.தலைவர்), தினேஷ் குமார் (து.செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.