தூத்துக்குடி உழவர் சந்தையில் ஒழுக்கத்தை கற்று கொடுத்த கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்தில் தற்காலியமாக இயங்கி வரும் உழவர் சந்தையில் சுற்று வட்டார பகுதி மக்கள் தினம்தோறும் காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்க வருகின்றனர். தூத்துக்குடி உழவர் சந்தைக்கு வரும் மக்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடித்து காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்கி செல்கின்றனர்.

தூத்துக்குடி உழவர் சந்தையில் எப்போதும் கூட்டம் கூட்டமாக அலைமோதும் மக்கள், தங்களுக்கு தேவையா? தேவையில்லையா? என யோசிக்கமா வாங்கும் பொருட்கள், காலில் சக்கரம் கட்டிவிட்டது போல் ஓடிக்கொண்டிருக்கும் மக்கள், அடிக்கடி விலைகளை கூறிக்கொண்டிருக்கும் வியாபாரிகள் என பரபரப்பாக இருக்கும் நம்ம தூத்துக்குடி உழவர் சந்தை.. இப்போம் கொரோனா தொற்று காரணமாக மக்கள் சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று தேவையான காய்கறிகளை மட்டும் லிஸ்ட் போட்டு வாங்கிட்டு போறத பார்த்த கொரோனா நமக்கு ஒழுக்கத்தை நன்கு கற்று கொடுத்துவிட்டது என்றே கூறலாம்.