தூத்துக்குடி காமராஜர் கல்லூரி சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கரோனா நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடி காமராஜர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கரோனா நிவாரண நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தூத்துக்குடி ராஜபாளையத்தில் உள்ள பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காமராஜர் கல்லூரி முதல்வர் தலைமை தாங்கி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கரோனா நலத்திட்ட தொகுப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் பிரேமா ஸ்டாலின், உதவி ஆய்வாளர் தாமஸ், கல்லூரி பேராசிரியர் தேவா உள்பட பலர் கலந்து கொண்டு தலா ரூ.ஆயிரம் மதிப்புள்ள நல தொகுப்புகளை 30 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வழங்கி உதவினார்.