கொரோனா நிவாரணப் பொருட்கள் – தருவைக்குளம் கூட்டுறவு பண்டகசாலை

தற்போது உலகமெங்கும் மக்கள் அனைவரும் கொரோனா நோயால் அச்சுறுத்தப் பட்டு வருகின்றனர். இக்கொரோனா தொற்று நோய் பரவுதல் காரணமாக ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளத்தில் அமைப்பு சாரா உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. (0.1035) தருவைக்குளம் கூட்டுறவு பண்டகசாலை மூலமாக கூட்டுறவு பண்டகசாலை. தலைவர் S.M.அமலதாசன் (எ) பழம் வழங்கினார். இந்நிகழ்ச்சில் விற்பனையாளர் S.வைரமுத்து, முனைவர் அ.மார்சல் செரின் ஆகியோர் கலந்து கொண்டனர்