கோவில்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரிசோதனை மையம் – அமைச்சர் துவக்கி வைப்பு!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீராம்நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரிசோதனை மையம் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்
கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு கொரோனா நோய் தடுப்பு சிறப்பு காய்ச்சல் முகாமினை துவக்கி வைத்து சளி மாதிரிகள் சேகரிக்கும் பணிகளை பார்வையிட்டார்.

பின்னர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி
மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்களிடையே கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு வடிவமைத்த விழிப்புணர்வு மடிப்பேடுகள் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி ஏற்கனவே தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.80 லட்சம் மதிப்பிட்டில் கொரோனா தொற்று பரிசோதனை ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டது.

பின்னர் இக்லியா வேதியல் பொருள் கண்டறியும் கருவியும், தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் நவீன தானியங்கி RNA பிரித்தெடுக்கும் கருவியும் துவக்கி
வைக்கப்பட்டது. இதன் மூலம் நோய் தொற்று துல்லியமாகவும், மாதிரிகளில் முடிவுகள் விரைவாகவும் கிடைக்கப் பெறுகிறது.

இந்நிலையில் கண்ணுக்கு தெரியாத கொரோனா தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நோய் தொற்று அறிகுறிகள் குறித்து சந்தேகிக்கப்படும் ஆரம்பக்கட்டத்தில் உள்ள நபர்களுக்கு கூடுதல் மாதிரிகள் எடுப்பதன் மூலம் கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு ஏற்கனவே

தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள ஸ்டேட்பேங் காலனி மற்றும் திரேஸ்புரம் ஆகிய பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா நோய் தடுப்பு சிறப்பு காய்ச்சல் முகாம் துவக்கி வைக்கப்பட்டது.

மேலும் கணேஷ் நகர், பிஅண் டி காலணி, முள்ளகாடு, லூர்தம்மாள்புரம் ஆகிய 4 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் துவங்கப்பட்டுள்ளது.

இன்று கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீராம்நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரிசோதனை மையத்தினை துவக்கி வைக்கப்பட்டது.

அதேபோல் ஊரணித்தெரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரிசோதனை மையம் செயல்படுகிறது. இதன் மூலம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பல்வேறு நபர்களுக்கு காய்ச்சல், சளி
உள்ளிட்ட பரிசோதனைகள் மிக விரைவில் செய்ய முடியும்.

நோய் அறிகுறி உள்ள நபர்களின்
பரிசோதனை முடிவுகள் கிடைக்கப் பெற்றதுடன் உடனடியாக அவர்களை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்து உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளபடி, பொதுமக்கள் அவசிய பணிகளுக்கு மட்டும் வீட்டில் இருந்த வெளி வர வேண்டும். வீட்டில் இருந்து வெளி வரும்போது முககவசங்களை அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர்
கடம்பூர் செ.ராஜூ நகராட்சி மூலம் தயாரிக்கப்பட்ட கபசுர குடிநீரை
பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும்,இந்திய ஹோமியாபதி துறையின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் பொட்டலங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கூடிய சக்தி மிகுந்த மாத்திரைகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்,மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ராஜராம், கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.அனிதா சிவக்குமார், நகராட்சி நிர்வாக பொறியாளர் கோவிந்தராஜன், மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.