மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் – தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம், கொரோனா நிவாரண பொருள்கள் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சிகள்

இன்று(15.06.2021) தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை காலை 10.30 மணியளவில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி கருணாநிதி.MP. அவர்களும், சமூகநலத்துறை அமைச்சர் திருமதி. P.கீதாஜீவன்.MLA. அவர்களும் இந்த தடுப்பூசி சிறப்பு முகாமை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செந்தில்ராஜ் அவர்களும், தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி திரு.கணேஷ் அவர்களும் மற்றும் IOB திரு.ஸ்ரீராம் அவர்களும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. பிரம்மநாயகம் அவர்களும் முன்னிலை வகித்து IOB பேங்க் சார்பாக தடுப்பூசி போட்ட 65 மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருள்கள் வழங்கினார்கள். அதனை தொடர்ந்து அனைவருக்கும் மதிய உணவினை தாசில்தார் அவர்கள் வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் மற்றும் தமிழக மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றம் நல்வாழ்வு சங்கம் சார்பில் தலைவர் மு.மருதப்பெருமாள்.எம்.காம், செயலாளர் P.ஜெயராஜ், பொருளாளர் K.செல்வக்குமார், து.தலைவர் பேச்சிமுத்து, து.செயலாளர் தினேஷ் குமார் இணைந்து சிறப்பாக செய்திருந்தார்கள்.