சேர்வைக்காரன்மடத்தில் கொரோனா நிவாரண பணிகள்: தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி!!
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி, சேர்வைகாரனமடத்தில் உள்ள கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை 2020 மே முதல் தேதியில் வழங்கியது.
உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு தூய மரியன்னை கல்லூரி சிறப்பான பணிகள் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அருகேயுள்ள சேர்வைகாரன்மடத்தில் நம்மாழ்வார் பகுதியில் வசிக்கும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி ய 37 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் உட்பட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த கிராமத்திலுள்ள மக்கள் நலிந்த ஏழை நெசவுத் தொழிலாளர்கள். கொரனா ஊரடங்கால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட நிலையில் இந்த நிவாரண பொருட்கள் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நோக்கத்தோடு தூய மரியன்னை கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி முனைவர். லூசியா ரோஸ் அவர்களின் முயற்சியால் இந்த உதவிகள் செய்யப்பட்டன. தாவரவியல் துறை பேராசிரியர்கள், கணிதவியல் துறை மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் தாராளமாக பொருளுதவிகளை வழங்கினார்கள். தாவரவியல் துறை உன்னைத் பாரத் அபியான் ஒருங்கினணைப்பாளர்கள் முனைவர் திருமதி சுமதி, முனைவர் திருமதி. ஜெனிபர் மற்றும் கணிதவியல் துறை உன்னைத் பாரத் அபியான் ஒருங்கினணைப்பாளர் முனைவர் திருமதி அருள் ஜெஸ்டி, ஆகியோரின் மூலம் நிவாரணம் பொருள்களுக்கான பொருளுதவி பெறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முனைவர் திருமதி. M. குளோரி, தாவரவியல் துறை தலைவர் மற்றும் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரஸ் கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் நிவாரணப் பொருள்களை பயனாளிகளுக்கு வழங்கினார். தாவரவியல் துறை உன்னைத் பாரத் அபியான் சார்பில் ஏற்கெனவே வழங்கப்பட்ட தையல் இயந்திரங்கள் மூலமாக நம்மாழ்வார் நகரப் பெண்கள் முகக் கவசங்கள் தயாரித்து பயன்படுத்துகின்றனர். இந்நிகழ்ச்சியின் போது சமூக இடைவெளியுடன் கலந்து கொள்ள கிராமத்து இளைஞர்கள் உதவினார்கள்.