கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கல்: ராஜ ரத்தின நாடார் மக்கள் அறக்கட்டளை

கொரானா தொற்று நடவடிக்கையால் ஏழை எளிய மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் ராஜ ரத்தின நாடார் மக்கள் அறக்கட்டளை சார்பாக லூசியா மாற்றுதிறனாளி மறுவாழ்வு இல்லத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இது குறித்து லூசியா மாற்றுதிறனாளி மறுவாழ்வு இல்ல நிர்வாகி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : இந்த காலக்கட்டத்தில் மாற்று திறனாளிகள் வாழ்வாதரத்திற்கு சிரமம்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் விதமாக ராஜ ரத்தின நாடார் மக்கள் அறக்கட்டளை சார்பாக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. பொருட்களை ராஜரத்தின நாடார் மக்கள் அறக்கட்டளை தலைவர் ஸ்டீபன் மற்றும் செல்வ சந்தான பாண்டி அவர்கள் அளித்தனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என கூறியுள்ளார்.