தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட சார்பில் கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கல்

கோமஸ் புரம் நேருநகர் பகுதியில் நலத்திட்ட உதவிகள் தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட சார்பாக இன்று காலை நடைபெற்றது.

தூத்துக்குடி கோமஸ்புரம் நேரு நகர் பகுதியில் மூன்றாம் பாலினத்தவர், தூய்மைப் பணியாளர்கள், ராஜபாளையம் பகுதி கூலி தொழிலாளர்கள், நரிக்குறவர்கள் மற்றும் முல்லை நகர் கூலித் தொழிலாளிகள் என மொத்தம் 210 குடும்பங்களுக்கு தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் மேதகு. ஸ்டீபன் அவர்கள் தலைமையில் தூத்துக்குடி சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் தாமஸ் பயஸ் அருள் அவர்கள் முன்னிலையில் அரிசி பலசரக்கு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தூத்துக்குடி பல்நோக்கு சேவா சங்க இயக்குனர் பணியாளர் பெஞ்சமீன் அவர்களும், முன்னாள் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பணியாளர் சா.தே. செல்வராஜ், லூசியா மாற்று திறனாளி இல்ல இயக்குனர் பணியாளர் கிராஸியாஸ் மைக்கேல், புனித அந்தோனியார் திருத்தல பங்கு பணியாளர் சுசீலன், மற்றும் வேளாங்கண்ணி மாதா ஆலய பங்கு பணியாளர் ஜெரோஸின் மற்றும் மறைமாவட்ட தன்னார்வலர்கள், வேளாங்கண்ணி மாதா ஆலய பங்கு தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.