திரேஷ்புரம் பகுதியில் நாட்டுப்படகு மீனவர் சங்கம் சார்பில் கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது

தூத்துக்குடி மாவட்ட திரேஷ்புரம் பகுதியில் நாட்டுப்படகு மீனவர் சங்கம் சார்பில் இன்று (17.04.2020) நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் திரு.ராபர்ட் அவர்கள் தலைமையில் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து நாட்டுப்படகு ஒன்றுக்கு பை ஒன்று 25 கிலோ அரிசி வீதம் 3 அரிசி பைகள் என அனைத்து நாட்டுப்படகுக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் M.A., அவர்கள் கலந்துகொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி அங்கு நின்றிருந்த மீனவர்களிடையே கரோனா வைரஸ் பரவும் விதம் குறித்தும், அதன் காரணமாக நாம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்தும், சமூக இடைவெளியை பின்பற்றுவதன் அவசியம் குறித்தும், முக கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் வடபாகம் காவல் ஆய்வாளர் திரு.அருள் மற்றும் மீனவ பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் மூலம் சுமார் 300க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் பயனடைந்தனர்.