1000பேருக்கு கொரோனா நிவாரண பொருட்கள்: சாத்தான்குளம்

1000பேருக்கு கொரோனா நிவாரண பொருட்கள்- தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ வழங்கினார்.

சாத்தான்குளம் ஒன்றியம், சங்கரன்குடியிருப்பு மற்றும் தட்டார்மடத்தில் நலிவுற்ற 1000பேருக்கு கொரோனா நிவாரண பொருட்களை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ வழங்கினார்.

சாத்தான்குளம் ஒன்றியம், புதுக்குளம் ஊராட்சிக்குள்பட்ட சங்கரன்குடியிருப்பில் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி, ஊராட்சித் தலைவர் பாலமேனன் ஆகியோர் ஏற்பாட்டின்படி ஏழை-எளிய 500 பேருக்கு கொரோனா நிவாரண உதவியாக 5 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் ஜெயபதி தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் பாலமேனன் முன்னிலை வகித்தார். இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு நிவாரண பொருள்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், ஒன்றிய அதிமுக செயலாளர் அச்சம்பாடு சவுந்தரபாண்டி, மாவட்ட கவுன்சிலர் தேவ விண்ணரசி, சாத்தான்குளம் நகர செயலாளர் செல்லதுரை, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் சுரேஷ்குமார், முன்னாள் ஒன்றிய செயலர் ராஜ்மோகன், சாத்தான்குளம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் அப்பாத்துரை, உறுப்பினர்கள் ஜோதி, செல்வம், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலர் பாலகிருஷ்ணன், ஒன்றிய மாணவரணி செயலாளர் ஸ்டான்லி , முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் ஜெயராணி, ஒன்றிய ஜெயலலிதா பேரவை தலைவர் சின்னத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சாத்தான்குளம் ஒன்றியம் நடுவக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட தட்டார்மடத்தில் ஊராட்சிமன்ற தலைவர் சபீதாசெல்வராஜ் தலைமையில் எஸ்.பி சண்முகநாதன் எம்எல்ஏ 500 ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவியாக அரிசி, காய்கனி, பிஸ்கட், தர்பூசணி மற்றும் கபசுரக்குடிநீர் வழங்கினார். இதில் நடுவக்குறிச்சி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சந்திரசேகர், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் விஜயன், பேச்சியம்மாள், மேரிகலாவதி, மற்றும் ரங்கநாதன், பூவன்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.