மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள்: ராஜேஷ் திலக் மருத்துவமனை

கொரோனா தொற்று நோய் பரவலின் போது நமக்காக தினமும் பணிபுரியும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு ராஜேஷ் திலக் மருத்துவமனை சார்பில் கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இன்று (25-05-2020) ராஜேஷ் திலக் மருத்துவமனை சார்பாக மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் மசாலா பொருள்கள் போன்ற அத்திவாசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுகாதார அதிகாரி Dr. அருண் குமார், உதவி ஆணையர் ராமசந்திரன், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின், மற்றும் Dr. ராஜேஷ் திலக், Dr. ஜாஸ்மின் ராஜேஷ் திலக் அவர்களின் தந்தை, மூத்த வழக்கறிஞர் AWD திலக், வழக்கறிஞர் அதிசயகுமார், blood ஜெயபால் ஓலிவர் மற்றும் எஸ்.எஸ் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.