கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை – தருவைக்குளம் ஊர் நிர்வாகம்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் தருவைக்குளம் காவல்த்துறை அனுமதியுடன் தருவைக்குளம் ஊர் நிர்வாகம் சார்பில் தருவைக்குளம் ஊருக்குள் நுழையக்கூடிய முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டு ஒரேஒரு சாலைவழியாக மட்டும் செல்லும் வகையில் ஏற்படுத்தி, அவ்வழியே வரும் வாகனங்களிலும் வாகன ஓட்டுநர்களின் மீதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு உதவியாக காமராஜ் நற்பணி மன்றத்தினரும், தருவைகுளத்தை சேர்ந்த ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற ஒன்றிய கவுன்சிலர் ஆலோசனை மரியானும் உடன் பணி செய்து வருகின்றனர்.