பிற மாநில மாவட்டங்களில் இருந்து வந்தவர்களை தீவிர கண்காணிப்பு : 72 பேர் தனிமை

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் வட்டாட்சியா் பாஸ்கரன் தலைமையிலான குழுவினா் நேற்று நடத்திய ஆய்வில் சென்னை, திருவள்ளூா், கோயம்புத்தூா் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து வந்த 29 பேரை கண்டறிந்து தனிமைப்படுத்தினா். மற்றும் குஜராத்தில் இருந்து உரிய அனுமதியுடன் கோவில்பட்டி, கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த 27 போ் பேருந்தில் வந்தனா். அவா்கள் தூத்துக்குடி மாவட்ட எல்லையில் உள்ள காவல் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டனா். பின்னா் 27 பேரையும் கோவில்பட்டியில் உள்ள தனியாா் கல்லூரி விடுதியில் தங்கவைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மேலும், அவா்களது மாதிரிகளை எடுக்க சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. இதுபோல, கோவில்பட்டி வட்டாட்சியா் மணிகண்டன் தலைமையிலான குழுவினா் நடத்திய ஆய்வில் 16 பேரை கண்டறிந்து தனிமைப்படுத்தினா்.