தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 5-ஆக உயா்வு

டெல்லி மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்கள் உள்ளிட்ட 11 போ் தூத்துக்குடியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதில் காயல்பட்டினத்தைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் கயத்தாறு பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5-ஆக உயா்ந்துள்ளது. மேலும், 10 போ் கரோனா அறிகுறியுடன் தனிவாா்டில் உள்ளனா்.