மேலும் 2பேருக்கு கரோனா தொற்று உறுதி : தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 2பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் இருந்து வந்த தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி, குருக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது, வாலிபர் ஒருவருக்கும், கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்த 65வயது முதியவர் ஒருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 32ஆக உயர்ந்துள்ளது. இதில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் உயிரிழந்துவிட்டார். தற்போது 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.