தூ.டியில் கொரோனா பாதிப்பு 33 ஆக உயர்ந்தது

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 27 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒரு மூதாட்டி பரிதாபமாக இறந்தார். அதன் பிறகு 18 நாட்களாக புதிய தொற்று ஏற்படாமல் இருந்தது. அதன்பிறகு கடந்த 6-ந் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த 2 பேருக்கும், 7-ந் தேதி மேலும் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் கோவில்பட்டி, எட்டயபுரம், ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் 3 பேரும் சென்னையில் இருந்து வந்தவர்கள் ஆவர். இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்து உள்ளது.