கொரோனா நோயாளி இல்லாத மாவட்டம் – தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.

கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட 27 பேரில் கடைசியாக ஒரே ஒரு நோயாளி குணமடைந்து இன்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவரை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி ஆகியோர் பழக்கூடை கொடுத்து வாழ்த்தி வழியனுப்பிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தூத்துக்குடி மாவட்டத்தில் 3535 பேரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் 27 பேருக்கு நோய் ஏற்பட்டது. அதில் அனைத்து நோயாளிகளும் குணமடைந்துள்ளதான் மூலம் இம்மண்டலம் சிகப்பு மண்டலத்திருந்து ஆரஞ்சு மண்டலாமாக மாறியுள்ள நிலையில் பச்சை மண்டலாமாக மாறுவதற்கு மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். 

இம்மாவட்டத்தில் கோரனா நோய் தாக்கம் இருந்த வேளையில் இதனை எதிர்த்து பணியாற்றிய மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார்.வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவர்கள் முறையாக அனுமதி பெற்று இங்கு வரும் போது அவர்களுக்கு மத்திய,மாநில அரசின் சுகாதரத்துறை அறிவுறுத்தலின் படி சோதனை நடத்தப்படும். முறையான அனுமதி பெறாமல் வெளி மாநிலம், வெளிமாவட்டங்களிலிருந்து யாரவது வந்தால், இது மக்கள் பிரச்சனை என்பதை மனதில் வைத்து போது மக்கள் அவர்களை பற்றி தகவலை தெரிவிக்க வேண்டும் என்றார்.