கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் இன்று நேரில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் IAS அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி அவர்கள் ஆகியோர் தூத்துக்குடியில் கொரோனா தொற்றல் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த சுனாமி குடியிருப்பு பகுதி மற்றும் டூவிபுரம் பகுதியில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் உடன் மாநகராட்சி ஆணையர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் அவர்கள் இருந்தார்

மேலும் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட டூவிபுரம் பகுதியினை தூத்துக்குடி மாநகராட்சி மூலம் தடை செய்யப்பட்டுள்ளது. உடல் வெப்பநிலை அறிந்து கொள்ளும் கருவி மூலம் அப்பகுதி மக்களுக்கு உடல் வெப்பநிலை அறிந்து கொள்ளும் பணி சுகாதார பணியாளர்களால் மேற்க்கொள்ளபட்டு வருகிறது மற்றும் கொரோனா தொற்று நோயால் தடை செய்யப்பட்டுள்ள பகுதியில் மாநகராட்சி பணியாளர்களால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, நோய் தடுப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.