தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் முதல் காரோனா பாதிப்பு

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தற்போது  கரோனா  சிறப்பு சிகிச்சை வார்டில் 26 பேர் அனுமதிக்கப்பட்டு  உள்ளனர். இதில் 18 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று பசுவந்தனையைச் சேர்ந்த பெண்ணுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று புதிதாக 3 புதிய நோயாளிகள் சேர்ந்துள்ளார். அவர்களது ரத்த மாதிரி பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் செய்துங்கநல்லூர் 1 மற்றும் கயத்தார்  பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர், கோவில்பட்டியை சேர்ந்த இருவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக மொத்தம் தூத்துக்குடி மாவட்டத்தில் 24பேர் கரோனா வைரஸ் காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர் என தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி தெரிவித்துள்ளார். 

பசுவந்தனையைச் சேர்ந்த பெண்ணுக்கு கரோனா வைரஸ் வந்தது,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் முதல் தொற்று ஆகும். இதையடுத்து பசுவந்தனை காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது. நாகம்பட்டி, செவல்பட்டி, கப்பிகுளம், பொம்மையாபுரம், மீனாட்சிபுரம், கீழமங்கலம் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பசுவந்தனை செல்வதை தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.