கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்தும் கம்மங்கஞ்சி கடைக்கார பெண் – தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிளையூரணி ஊராட்சிக்கு உட்பட ஒரு கிராமத்தில் மோர், கம்மங்கூழ் கடை நடத்தி வரும் டெய்சி அவர்கள் T. சவேரியார்புரதை சேர்ந்தவர் ஆவார். இவர் மகளிர் சுய உதவி குழுவும் நடத்தி வருகிறார். அந்த குழுவின் சார்பில் காலையில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார்கள். 10 மணி முதல் 3 மணி வரை மோர் மற்றும் கம்மங்கூழ் நடத்தி வருகிறார்கள். தன்னுடைய கடைக்கு கம்மங்கஞ்சி குடிக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு கம்மங்கஞ்சி வழங்கும் முன்பு கையில் கிருமி நாசினி தெளித்து கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்

சாதாரண கிராமத்தில் பெண்களுடன் சேர்ந்து சுத்தமாகவும் கொரானா விழிப்புணர்வு உடனும் அவர்கள் செயல்படும் விதம் தூத்துக்குடி மட்டும்மல்ல தமிழ்நாட்டில் உள்ள யாருக்கும் கொரானா மட்டும்மல்ல வேறு எந்த நோயும் பரவாது எனவே மக்கள் பயப்பட வேண்டாம் என்றும் முன் எச்சரிக்கையாக இருப்போம்.