பள்ளி மாணவாின் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் – தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகரைச் சேர்ந்த அருண்செல்வம் இவர் தூய சவோியார் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 படித்து கொண்டு வருகிறார். இவர் சிறு வயது முதல் ஓவியம் வரைவதில் ஆர்வமிக்கவராகவே இருந்து வருகிறார். 2016-ம் ஆண்டு முதல் தான் பென்சிலால் வரையும் ஓவியங்களை பாதுகாத்து வருகிறார். இவர் சமீபத்தில், திரைக்கு வரவிருக்கும் மாஸ்டர் படத்தில் நடிக்கும் நடிகர் விஜய்யின் படத்தை பென்சிலால் வரைந்து அசத்தியுள்ளார். தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் நிலை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்நேரத்தில் கொரோனா விழிப்புணர்விற்க்காக ஒரு இளைஞன் வீட்டிற்குள் இருப்பது போன்ற படத்தை வரைந்து தனக்கு தெரிந்த அனைவருக்கும் அனுப்பியுள்ளார். நமது Timestamp news பத்திரிகையாளர், அருண்செல்வமிடம் அந்தப் படத்தை வரைந்து காட்டமுடியுமா என்றவுடன் தனது இடது கையால் சிறிது நேரத்தில் வரைந்து முடித்துக்காட்டி நம்மை வியப்பில் ஆழ்த்தினார். தொடர்ந்து நம்மிடம் பேசும் போது கொரோனா என்னும் வைரஸ் உலகம் முழுவதும் பரவிகிட்டு வருகிறது. இதனால் இந்திய அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வீட்டிலேயே எல்லோரும் நல்லபடியாக, பாதுகாப்பாக இருக்க வேண்டுமென சொல்லியிருக்கிறார்கள். நான் ஓய்வு நேரத்தில் ஓவியம் வரையும் பழக்கம் உள்ளவன் என்பதால் இந்த நேரத்தில் எனது நண்பர்களுக்கு வீட்டில் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி படம் வரைந்து வாட்ஸ்அப் மூலமாக அனுப்புகிறேன். வீட்டிற்குள்ளே பாதுகாப்பாய் இருந்து கெரோனாவை ஒழிப்போம் என்றார் மாணவர் அருண்செல்வம். நாமும் அவரின் இந்த விழிப்புணர்வு முயற்சியை வாழ்த்துவோம், பாராட்டுவோம்!!!