பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு : டி.எஸ்.பி. பிரகாஷ்

கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியா முழுவதும் வரும் மே 3 ம் தேதி வரை தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடி டவுன் டி.எஸ்.பி. பிரகாஷ்  ஆலோசனையின் பேரில் மத்திய பாகம் காவல் நிலையம் சார்பில் குருஸ்பர்னாந்து சிலை அருகே வைத்து மத்தியபாகம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் எங்களிடமிருந்து 2மீ இடைவெளி விட்டு நிற்க வேண்டும். வாகனத்தை விட்டு கீழே இறங்கி நிற்க வேண்டும். அடையாள அட்டை காட்ட வேண்டும், கட்டாயம் மாஸ்க்,ஹெல்மட் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரோடா பாய் ஜெயசித்ரா, கணேசன், நாகராஜ பாண்டியன்,  காவலர்கள் உதயகுமார், முரளி, தன்னார்வலர்கள் இருதய சாமி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Credit : tutyonline