இ-சேவை மையங்கள் மற்றும் ஆதார் சேர்க்கை மையங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது : தூ.டி ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையொட்டி தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து பொது இ-சேவை மையங்கள் மற்றும் ஆதார் சேர்க்கை மையங்கள் வரும் 31.03.2020 அன்று வரை தற்காலிகமாக மூடப்படுகிறது. எனவே பொதுமக்கள் வரும் 31.03.2020 வரை தங்களுக்கு தேவையான ஆன்லைன் சான்றிதழ்களை வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க, ஏற்கனவே தமிழக அரசினால் மக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.