தூத்துக்குடி புதுத்தெருவில் மஞ்சள் வேப்பிழை கலந்த தண்ணீா் தெளித்து கொரோனா முன்னெச்சரிக்கை

தூத்துக்குடி புதுத்தெருவில் மஞ்சள் வேப்பிழை கலந்த தண்ணீா் தெளித்தனா் :
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட புதுத்தெருவில் பொியவா்களும் தாய்மாா்களும் இளைஞா்களுடன் இனைந்து கொரோனா வைரஸ் வராமல் தடுக்க செயிண்ட் ஜாா்ஜ் தெருவில் உள்ள மக்கள் அனைவரும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் கொடிய நோய் வராமல் தடுக்க மஞ்சள் வேப்பிழை கலந்த தண்ணீரை ஒவ்வொரு வீட்டிற்கு முன்பாகவும் மற்றும் தெரு முழுக்க தண்ணீரை தெளித்தனா். இந்த நிகழ்வில் தாய்மாா்களும் இளைஞா்களும் வேகமாக தண்ணீரை தெளித்தனா். செயிண்ட் ஜாா்ஜ் தெருவைச் சோ்ந்த ஆண்ஸ் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறும் போது மக்கள் தங்களால் முடிந்த மஞ்சள் வேப்பிழை கலந்த தண்ணீரை பயன்படுத்தி தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாது காத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.