கொரோனா விழிப்புணர்வும், தடுத்தல் நடவடிக்கையும் – தருவைக்குளம்

தூத்துக்குடி மாவட்டம் அருகே தருவைக்குளம் ஊரில் உள்ள மாணிக்கம் தெரு மக்கள் ஒன்றிணைந்து தங்கள் தெருவாசிகளுக்கு கொரோனா எனும் வைரஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு தகவல்களை ( 31.03.2020 ) இன்று தங்களுக்கு தாங்களே பறிமாறிக்கொண்டனர்.

இருந்தபோதும் தங்கள் தெரு முழுவதும் கிருமிநாசினியான வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரை தெரு முழுவதும் தெளித்தும், சிறியவர் முதல் பெரியவர்வரை அனைவரையும் குடிக்கச் செய்தனர்.

இதுபற்றி தெருவாசிகளிடம் கேட்டபோது,

அரசு அறிவுறுத்தலின்படி நாங்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை. மீறியாரேனும் வெளிவந்தாலும் தெருவைவிட்டு வெளியேறியதில்லை.
இதுபோல தனித்தனியே வீடுகளில் பலமுறைகள் செய்தாலும், இன்று தெருமுழுவதும் கிருமிநாசினி தெளித்தும் வேப்பிலை கட்டியும் வைரஸூக்கு எதிராக செயல்படுகிறோம் மற்றும் எங்கள் பங்குத்தந்தையின் அறிவுறுத்தலின்படி வீடுகளைவிட்டோ அல்லது தெருவைத்தாண்டியோ வெளிவருவதில்லை எனவும் முடிவெடுத்து இன்றுவரை கடைபிடிக்கிறோம் என்றனர்.

தருவைக்குளம் ஊருக்கு மாணிக்கம் தெரு முன்மாதிரியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.