தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட இராஜபாளையம் கிராமத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து சார்பில் கிருமி நாசினிகள் வழங்கப்பட்டது. அந்த கிருமி நாசினிகளை இன்று இராஜபாளையம் கிராம நிர்வாகம் சார்பில் கிராமத்தின் அனைத்து தெருக்களிலும் மற்றும் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் தெளிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டது. மேலும் போதுமான கிருமி நாசினிகள், கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்கள் தடையின்றி கிடைக்க வழிவகை செய்யுமாறு கிராம மக்கள் சார்பாக மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
