கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சமூக அயல் நிறுத்தம் ஒன்றே தீா்வு : மாவட்ட ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் காய்கனி மற்றும் மளிகைப் பொருள்கள் வாங்க அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.  தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள காமராஜா் காய்கறி மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசார் காய்கனி வாங்க வந்தோரை வரிசையில் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனா். 
இருப்பினும் கூட்டம் குறையாததால் காய்கனி வாங்க வந்தோரை போலீசார் வெளியேற்றியதாகவும், அப்போது, சந்தையில் உள்ள கடைகள் சேதமடைந்ததால் மார்க்கெட் மூடப்பட்டது. மேலும், வழக்கத்தைவிட மூன்று மடங்கு அதிக விலைக்கு காய்கனிகள் விற்பனை செய்யப்படுவதாகவும், விலையை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆா்வலா்கள் மற்றும் பல்வேறு அமைப்பைச் சோ்ந்தவா்கள் ஆட்சியரிடம் புகாா் தெரிவித்ததை அடுத்து, மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி காமராஜா் காய்கறி மார்க்கெட்டில்  நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சமூக அயல் நிறுத்தம் ஒன்றே தீா்வு என்பதால், அதற்கான ஏற்பாடுகளை செய்த பிறகு சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.