21 நாள் ஊரடங்கின் முதல்நாள் சுவாரசியங்கள்..

காலையிலிருந்து வண்ணாரப்பேட்டை சாலையில் காவல்துறை நண்பர்களோடு இணைந்த பணி. 11 மணி இருக்கும், தகவல் அறிந்து வந்த நண்பன் செந்தில் பணியில் உள்ள காவலர்களுக்கும், பத்திரிகையாளர் நண்பர்களுக்கும் கூல் ட்ரிங்ஸ் கேன்கள் செழிப்பாக வாங்கி கொடுத்தான்.

மதியம் 1 மணி அதே இடம் அதே வேலை நண்பன் பழக்கடை தங்கதுரை ஆரஞ்சு மற்றும் தர்பூசணி பழங்களோடு வந்தான். எல்லோருக்கும் கொடுத்தான்.

ஏழு மணியை தாண்டிய மாலை நேரம், அடையாளம் தெரியாத ஒரு நபர் காரில் வந்து இறங்கினார். முகத்தில் மாஸ்க், கைகளில் கையுறை அணிந்திருந்தார். அவரது காரில் கொண்டு வந்திருந்த கூல்டிரிங்ஸ், பிஸ்கட்ஸ், மற்றும் கையுறை போன்றவற்றை அங்கிருந்த காவலர்கள், பத்திரிகை நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் வந்து கொடுத்தார்.

நீங்கள் யார் என்று கேட்டேன், தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிவதாக தெரிவித்தார், நண்பர்களோடு சேர்ந்து இந்த சிறிய உதவிகளை செய்து வருவதாக தெரிவித்தார்.

கடமையை மட்டும் செய்து வரும் நபர்களுக்கு, இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் உதவி செய்யும் நண்பர்கள் இருப்பதும், முகம் தெரியாத சில மனிதர்கள் உதவுவது என்பதும் மனிதம் இன்னும் வாழ்கிறது என்பதை படம் பிடித்துக் காட்டும் நிகழ்வுதான்…

நல்ல மனங்கள் வாழ்க ! நண்பர்கள் வாழ்க !! நாடு வாழ்க !!!