விலையில்லா சோப், டெட்டால், சனிடேஷர், ஃபேஸ் மாஸ்க் வழங்கிய முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளர் : தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி : தூத்துக்குடி அண்ணாநகர் பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் மக்கள் போற்றும் சாமானிய முதல்வர் டாக்டர்.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, வீட்டினுள் வசிக்கும் மக்களுக்கு (curfew) கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள விலையில்லா சோப், டெட்டால் சனிடேஷர், ஃபேஸ் மாஸ்க் போன்றவை அண்ணா நகர் பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் நெல்லை ஆவின் தலைவர் பி.ஏ.ஆறுமுக நயினார் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது. உடன் தலைமைக் கழகப் பேச்சாளர் எஸ்டி.கருணாநிதி, வட்டக் கழக பிரதிநிதி வீரக்கோன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் சந்தனபட்டு, நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைத் தலைவர் சகாயராஜா டிரைவர் முருகன், சேர்மதுரை, உட்பட பலர் இருந்தனர். இதனைப் பெற்றுக் கொண்ட பொதுமக்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டில் இருக்கும் எங்களுக்கு வீடு தேடி வந்து எங்களுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான அத்தியாவசிய பொருட்களான பேஸ் மாஸ்க், சானிட்டரி ஹேண்ட் வாஷ், டெட்டால் போன்றவைகளை தனது சொந்த செலவில் வழங்கிய முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினார் அவர்களையும், இதனை அதிமுகவினர் வாயிலாக மக்கள் பணி செய்ய முடுக்கி விட்ட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர்.எடப்பாடியார் அவர்களையும் இப்பகுதி மக்கள் மனதார பாராட்டினார்.