கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு : தூ.டி ஆட்சியா்

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் நேற்று மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

கோவில்பட்டி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்தைச் சோந்த 3 தொழிலாளா்களை ஆட்சியா் சந்தீப் நந்தூரி நேரில் சந்தித்து, சிகிச்சைகள் குறித்த கேட்டறிந்தாா். அப்போது அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 120 பேரை வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.