கரோனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படுகிறது : தூ.டி ஆட்சியர் அலுவலகம்

கரோனா வைரஸ் காரணமாக  தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 31ஆம் தேதி வரை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மனு நீதிநாள் முகாம், அம்மா திட்ட முகாம் போன்ற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ள நிலையில் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அவர்கள் மனு அளிக்க வசதியாக, ஆட்சியர் அலுவலக வாயிலில் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. 
ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் அனைவரும் கைகழுவ வசதியாக பிரதான நுழைவு வாயிலில் கைகழுவ தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரும் தெர்மோ ஸ்கேனர் மூலம் பரிசோதித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.. ஆட்சியர் அலுவலகத்திற்குள் அதிகாரிகள், ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அலுவலகம் முழுவதும் கரோனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.