தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக சங்கு கூட்டரங்கில் கொரானா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று (02.04.20) நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் காரோனா வைரஸ் தொற்று இதுவரை மூன்று பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தொடர்பில் உள்ள பல்வேறு நபர்களுக்கு ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அலுவலர்கள் நோய் தொற்றுக்கு ஆளான நபரின் பயண விவரங்களை முழுமையாக அவர்கள் வரும் வழியில் வெளி மாநில அல்லது வெளி மாவட்டத்தில் யார் யாரை சந்தித்திருந்தாலும் மற்றும் வெளிமாநில அல்லது வெளி மாவட்டத்தில் ஹோட்டல்களை உணவு அருந்திருந்தாலும் வெளி மாநில அல்லது வெளி மாவட்டத்தில் வாடகை வாகனங்கள் பயன்படுத்தினாலும் அது குறித்த விவரங்கள் சேகரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பில் உள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவர் சந்தித்த சென்ற வந்த பலசரக்கு கடை, பால் பூத் உள்ளிட்ட அனைத்து பகுதிகளின் விவரங்கள் அறிந்து அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். மேலும் அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் தினசரி காய்ச்சல் உள்ளதா என்பதை பணியாளர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். இது விவரங்களை அனைத்தும் கவனமாக தயாரித்து இது தொடர்பாக மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் இருப்பிட பகுதியில் முழுமையானகிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்த வேண்டும். இப்பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) திரு.விஷ்ணு சந்திரன் தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு சிம்ரோன் ஜீத் காலோன இ.ஆ.ப , சுகாதார பணிகள் துணை இயக்குனர் மரு.கிருஷ்ணலீலா (தூத்துக்குடி) மரு. அனிதா (கோவில்பட்டி) உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) திரு உமாசங்கர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பழையகாயல் அஸ்வினி பிடிரிஸ் சார்பாக (கொரானா வைரஸ் தொற்று தடுப்பு) முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் 25 லட்சம் காசோலையினை மேலாளர் திரு மாரியப்பன் உற்பத்தி மேலாளர் திரு விஜய் ஆனந்த் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி அவர்களிடம் வழங்கினார்கள்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தொழில் கூட்டமைப்பின் யங் இந்தியன்ஸ் சார்பில் 25 லிட்டர் சனிடேஷன் மற்றும் 1000 முக கவசங்களை யங் இந்தியன்ஸ் சேர்மன் திரு.ரமேஷ் மதன், துணை சேர்மன் திரு.பொன் குமரன் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்களிடம் வழங்கினார்கள்.
