திருச்செந்தூர் சுப்ரமணியர் கோவில் ஆதரவற்றோருக்கு தினசரி உணவு வழங்கல்

திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் கரகரப்பு நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் கேட்டபோது கரோனா எதிரொலியாக அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டு, ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகின்றன. அரசு உத்தரவின்படி நாள்தோறும் ஏழை, எளிய மற்றும் ஆதரவற்றவா்கள் பசியை போக்கும் வகையில் தினசரி நண்பகல் 12 மணியளவில் 150 பேருக்கும், இரவு 7 மணியளவில் 100 பேருக்கும் உணவு பொட்டலங்கள் கரோனா தடுப்பு கட்டுப்பாட்டுடன் வழங்கப்படுவதாக கோயில் செயல் அலுவலா் சா.ப.அம்ரித், தக்காா் இரா.கண்ணன் ஆதித்தன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏப். 14ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏப். 6ஆம் தேதி நடைபெற இருந்த பங்குனி உத்திர விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அா்ச்சகா்கள் மற்றும் பணியாளா்களுக்கு தேவையின் அடிப்படையில் கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதிச்சீட்டு மாா்ச் 31 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு தற்போது குறைந்த பணியாளா்களை கொண்டு தினசரி 9 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கோயிலுக்குள் அனுமதிச்சீட்டுடன் வரும் அா்ச்சகா்கள் மற்றும் பணியாளா்கள் முகக் கவசம் அணிந்து வருவதையும், கைகளை கிருமிநாசினி பயன்படுத்தி சுத்தம் செய்வதையும், சமூக இடைவெளி கடைப்பிடிப்பதையும் கண்காணித்து வருகிறோம் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.