கரோனா முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் : தூத்துக்குடி மாவட்டம்

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கலுங்குவிளை, கூவைகிணறு, கோமானேரி, கலுங்குவிளை பகுதியில் ஒன்றியக்குழு உறுப்பினா் ப்ரெனிலாகாா்மல் போனிபாஸ் ஏற்பாட்டில் வீடு, தெருக்கள் மற்றும் தேவாலயம், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் இளைஞா்கள் சாா்பில் தண்ணீரில் மஞ்சள் கலந்து தெளித்ததுடன் மக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது. மேலும் ஆறுமுகனேரி சோந்தபூமங்கலம் ஊராட்சி பகுதியில் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை ஊராட்சித் தலைவா் சந்திராமாணிக்கவாசகம் தலைமையில் துணைத் தலைவா் நவீன் மற்றும் உறுப்பினா்கள் விநியோகித்தனா்.