கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை கீதாஜீவன் எம்எல்ஏ நேரில் ஆய்வு : தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகரில் அண்ணாநகர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக துறைமுக தலைவர் அறிவுறுத்தலின் பேரில், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ ஏற்பாட்டில் தூத்துக்குடி துறைமுக தீயணைப்பு அதிகாரி ஜெய்சங்கர் தலமையிலான குழுவினர்கள் தூத்துக்குடி துறைமுக தீயணைப்பு படைவீரர்களுடன் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இப்பணிகளை கீதாஜீவன் எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தார்.