தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சி காவல் கண்காணிப்பாளர் திரு.பாலகோபாலன் இ.கா.ப , விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.மோகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
