முகமூடி, சோப்பு, ஆயில் கிளிசரின், கை கழுவும் திரவம் ஆகிய பொருட்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் பணி – தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி அண்ணாநகர் 9வது தெருவில் ராஜலட்சுமி அறக்கட்டளையின் சார்பில் கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக முகமூடி, சோப்பு ஆயில், கிளிசரின், கை கழுவும் திரவம் ஆகிய பொருட்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி அவர்கள் தொடங்கி வைத்தார். அருகில் முன்னாள் மாவட்ட ஆவின் தலைவர் திரு.ஆறுமுக நயினார், வட்டாசியர் திரு.செல்வகுமார் மற்றும் அலுவலகர்கள் உள்ளன. தலைமைக் கழகப் பேச்சாளர் எஸ்டி.கருணாநிதி, வட்டக் கழக பிரதிநிதி வீரக்கோன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் சந்தனபட்டு, நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைத் தலைவர் சகாயராஜா டிரைவர் முருகன், சேர்மதுரை, உட்பட பலர் இருந்தனர்.