வணக்கம் நான் உங்கள் “முத்து” என்ற கார்ட்டூன் பொம்மை மூலம் கொரோனா விழிப்புணர்வு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “நான் உங்கள் முத்து” கார்ட்டூன் பொம்மை வைக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா வழிகாட்டி மற்றும் எனது ஆலோசனையை பின்பற்றி உங்கள் நலனை மேம்படுத்துங்கள் என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்து. மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு Automatic Sanitizer Spray கருவி வைக்கப்பட்டுள்ளது. இக்கருவி அருகில் கார்ட்டூன் பொம்மை மூலம் விழிப்புணர்வு பலகை வைக்க பட்டுள்ளது. அதில் கருவியை தொடாமல் கருவிக்கு கீழ் கைகளை காண்பிக்கவும் மற்றும் sanitizer மூலம் கைகளை சுத்தம் செய்து கொள்ளவும் என இரு வாசகம் எழுதப்பட்டுள்ளது.