கொரோனா உதவிப் பொருட்கள்: ஆர்.சி தொடக்க பள்ளி சிலுவைபட்டி

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிலுவைபட்டியில் உள்ள ஆர்.சி தொடக்க பள்ளி ஆசிரியர்கள் சார்பில் கொரோனா உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் கொரானா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் 30ம் தேதி வரை நீடிக்கப் பட்டுள்ளதை தொடர்ந்து இன்று சிலுவைபட்டி அருகே உள்ள ஆர்.சி தொடக்க பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் 13 பேர் ஒன்று சேர்ந்து அப்பள்ளியில் பயிலும் ஏழை ,எளிய மாணவ,மாணவியர்கள் 170 பேருக்கு ரூபாய் 51ஆயிரம் மதிப்பிலான அரிசி,பருப்பு,சீனி,மளிகை பொருட்கள் அடங்கிய ஆகியவை தொகுப்பினை பள்ளியின் தாளாளரும் தாளமுத்துநகா் பங்குத் தந்தையுமான இருதயராஜா வழங்கினார்கள். இந்நிகழ்வின் ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிாியா் வில்சன் மற்றும் ஆசிாியப் பெருமக்கள் செய்திருந்தனா்