தூத்துக்குடி மாவட்டத்தில் 345 பேருக்கு கரோனா பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில், 345 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  நோய் பாதிப்பால் மேலும் 5பேர் உயிரிழந்தனர். 
தூத்துக்குடி மாவட்டத்தில், மேலும் 345 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று பரிசோதனை முடிவிடில் உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 51 ஆயிரத்து 428 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 653 போ் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 46 ஆயிரத்து 316 ஆக அதிகரித்துள்ளது. 
கரோனா தொற்று பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முதியவா் இருவா் உள்பட ஐந்து போ் ஆகியோா் உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 329 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கரோனா பாதிப்புக்கு 4783 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.