தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,520 : அமைச்சர் விஜய பாஸ்கர்

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து இன்று மாலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த  அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியதாவது: தமிழக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்து வருகிறது. இதுவரை 46,985 கரோனா தொற்று மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று மட்டும் அதிகபட்சமாக 6,109 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இன்றைக்கு எடுத்த 6,109 பேரில் புதிதாக 43 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 1,520 ஆக அதிகரித்துள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் முதல்முறையாக ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சி மற்றும் தென்காசியில் தலா நால்வருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.  உயிரிழப்பு 17 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.