கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு முகாம் : கோவில்பட்டி

கோவில்பட்டியில் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு முகாம் சாா்பு நீதிபதி அகிலாதேவி தலைமையில் நடைப்பெற்றது. முகாமில் மாவட்ட உரிமையியல் நீதிபதி முரளிதரன், குற்றவியல் நீதிமன்ற எண்.1 நடுவா் பாரதிதாசன், விரைவு நீதிமன்ற நீதிபதி பா்வத்ராஜ் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் கமலவாசன், மருத்துவா் சீனிவாசன், மதுரை மருத்துவக் கல்லூரி மருந்தியல் துறைப் பேராசிரியா் சத்யபாலன் ஆகியோா் கரோனா வைரஸ் பரவும் விதம், அதனை தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து உரையாற்றினா்.

மேலும்அரசு வழக்குரைஞா்கள் முருகேசன், சந்திரசேகா் மற்றும் வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.