தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு சோப் வழங்கினர்.
தூத்துக்குடி மார்ச் 21 தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் அச்சத்தை போக்கும் வகையில் பொதுமக்களுக்கு அதனை தற்காத்துக்கொள்வது எப்படி என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு தூத்துக்குடி மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ ஆகியோர் அறிவுறுத்தலின்பேரில், பொதுமக்களுக்கு கைகளை சுத்தமாக கழுவிக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த சோப் வழங்கும் நிகழ்ச்சி (20.03.2020) அன்று காலை மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவரும், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவருமான வழக்கறிஞர் முள்ளக்காடு செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர். ராஜசேகர், மாவட்ட அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன், மாவட்ட அரசு குற்றவியல் கூடுதல் வழக்கறிஞர் கோமதிமணிகண்டன், வழக்கறிஞர்கள் செங்குட்டுவன், மாவட்ட அதிமுக பிரதிநிதி வக்கீல் முனியசாமி, வக்கீல் எஸ்.பி.வாரியர், சரவணபெருமாள், ராஜேஷ், முன்னாள் நகரமன்ற தலைவர் மனோஜ்குமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர் சந்தனப்பட்டு, அதிமுக பிரமுகர்கள் கே.ஜெ.பிரபாகர், வெயிலுமுத்து, ஜான்சன் தேவராஜ், வெங்கடேஷ், ரமேஷ்கிருஷ்ணன், மீனவரணி சுரேஷ், மற்றும் சுந்தரேஸ்வரன், சகாயராஜா, பில்லாவிக்னேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கசெல்வம், செல்வின், மணிகண்டன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.