கொரானோ தடுப்பு முறை பற்றி கலந்தாய்வு கூட்டம் : தூ.டி ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கொரானோ தடுப்பு முறை பற்றி ஆட்சியர் பேசியதாவது : அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள வட்டார மருத்துவ அலுவலர்கள் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள், பணியாளர்களுடன் கொரானோ காய்ச்சல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் மேற்கொண்டு அவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெளிவுப்படுத்திட வேண்டும்.  நமது மாவட்டத்தில் தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குநர் நோடல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு துணையாக தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் இருந்து ஒரு மருத்துவர், கொரானோ காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
நமது மாவட்டத்தில் கொரானோ வைரஸ் 24 X 7கட்டுபாட்டு அறை எண் 0461-2340101 என்ற இலவச தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். மேலும், கொரானோ காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக விழிப்புணர்வு பதாகைகளை அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகம், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலகம் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும். கொரானோ காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர்களை 108 ஆம்புலன்சில் அழைத்து செல்ல 0771 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். தினந்தோறும் அலுவலகங்களை கிருமி நாசினிகள் கொண்டு முழுமையாக துடைத்து சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். காவல்துறை பணியாளர்களுக்கும் கொரானோ காய்ச்சல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.