“கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டி” : தூத்துக்குடி நகர காவல்துறை

மார்ச் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்கு ஏற்படுத்தும் நாள். அன்று 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்த இர.பிரகாஷ்.M.A., (துணை காவல் கண்காணிப்பாளர் நகர உட்கோட்டம், தூத்துக்குடி மாவட்டம்) அறிவித்துள்ளார்.

எனவே குழந்தைகள் அனைவரும் வீட்டிலிருந்தபடியே A4 வெள்ளை தாளில் வண்ணப்பென்சில் அல்லது சாதாரண பென்சிலில் வரைந்து அலைபேசியில் புகைப்படம் எடுத்து தூத்துக்குடி நகர காவல்துறையின் மின்அஞ்சல் asptowntut@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்

காலக்கெடு :
2020 மார்ச் 22ம்தேதி காலை 07.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை வரும் மெயில்கள் மட்டுமே போட்டிக்கு எடுத்து கொள்ளப்படும்.

ஓவியங்கள் அனுப்பும் குழந்தைகளின் புகைப்படம், படிக்கும் வகுப்பு, பள்ளியின் விபரம்,பெற்றோர்களின் கைப்பேசி எண்கள் இணைக்கப்படுதல் அவசியம்.

பெற்றோர்கள் வரைந்து தருவதை தவிர்க்க வேண்டும்.

பரிசு விபரங்கள் :
முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என்று மூன்று பரிசுகள் உண்டு. மற்றும் 20பேருக்கு ஆறுதல் பரிசு. கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள்.

ஒருவர் ஒரு படம் மட்டுமே வரைந்து அனுப்பி வைக்கலாம்.

தலைப்பு : “ கொரோனோவை வெல்வோம்”