மக்கள் ஊரடங்கு நாளை காலை 5மணி வரை நீட்டிப்பு! – தமிழக அரசு அறிவிப்பு.

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வரும் நிலையில், உலக நாடுகள் அதை கட்டுப்படுத்த அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்தியாவிலும், கொரோனா நோய் வேகமாக பரவி வருவதால், அதை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் ஊரடங்கிற்கு பிரதமர் மோடி அழைப்புவிடுத்தார். அதை ஏற்று, இன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து தரப்பினரும் அதற்கு ஒத்துழைப்பு அளித்து வந்த நிலையில், மக்களின் நலன் கருதி, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக அது நாளை காலை 5மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.