மக்கள் சுய ஊரடங்கு : வெறிச்சோடிய கோவில்பட்டி நகரம்

கொரோனாவை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் இன்று மக்கள் சுய ஊரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. தீப்பெட்டி, தீக்குச்சி மற்றும் கடலைமிட்டாய் உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பஸ், வேன், ஆட்டோ என வாகனங்கள் அனைத்து இயங்கவில்லை, வணிக நிறுவனங்கள், தினசரி சந்தை ஆகியவை மூடப்படடுள்ளன.

பஸ் நிலையம், தெற்குபஜார்,ரெயில்வே நிலையம் என முக்கிய இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் வீடுகளை வீட்டு வெளியே வரவில்லை. நகராட்சி பணியாளர்கள் மட்டும் நகரில் வழக்கம் போல துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் முக்கிய இடங்களில் நகராட்சி ஊழியர்கள் கிருமி தடுப்பு நாசினி தெளித்து வருகின்றனர். இவற்றை மீறி சாலைகளில் செல்லும் நபர்களை காவல்துறையினர் அழைத்து அறிவுறுத்தி வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வருகின்றனர். ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்கள் அதிகாலையில் முடிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்கு சென்று விட்டதால் திருமண மண்டபங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

கோவில்பட்டி டி.எஸ்.பி.ஜெபராஜ் தலைமையில் காவல்துறையினர் நகரில் பல்வேறு பகுதிகளிலும் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். சில தன்னார்வலர்கள் சாலையேரத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்தவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கினர்.