வெறிச்சோடியது தூத்துக்குடி!

பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்துவதன் மூலம் கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்றும், எனவே 22.03.20 அன்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள் ஊரடங்கை கடைபிடித்து காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வெளியே வராமல் வீட்டுக்குள் இருக்கவும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.  இதையொட்டி தூத்துக்குடியில் மார்க்கெட்டுகள், கடைகள் மூடப்பட்டுள்ளது.

பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டமும் இல்லாததால் தூத்துக்குடி வெறிச்சோடி காணப்படுகிறது.