கொரோனா விழிப்புணர்வு – சுமங்கலி மகளிர் குழு

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட ஜெ. ஜெ நகரில் வசிக்கும் அன்னலட்சுமி அவர்கள் மற்றும் 12 பேர் கொண்ட சுமங்கலிகள் மகளிர் குழுக்கள் மாவட்ட ஆட்சியர் உத்திரவின்படி கொரானா நோய்த் தடுப்பதற்காக கையை சுத்தமாக கழுவுவதற்கும்,

தரை துடைப்பதற்கும் சோப் ஆயில் (liquid) போன்றவற்றை தூத்துக்குடி மாநகராட்சி, திருச்செந்தூர், கோவில்பட்டியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம், ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனைகள் போன்ற இடங்களில் குறைந்த விலையில் கொடுத்த உதவுகின்றன.

அதுமட்டுமின்றி 2012 ஆம் ஆண்டு M. அன்னலட்சுமி என்பவர் சான்ட்ரி நாப்கின் தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் மேலும் இவர் 2011 ஆம் ஆண்டு தூத்துக்குடி முத்தையாபுரம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்ற நிறுவனத்திடம் இருந்து சிறந்த பணியாளர் விருது பெற்றுள்ளார்.